காவல் அதிகாரிகள், போலீசாருக்கு மன அழுத்தம் குறைக்க ஒருநாள் சிறப்பு பயிற்சி: கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம், 2வது தளத்தில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் மன அழுத்ததிற்குள்ளான  காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில், கலந்துகொண்ட போலீசாரிடம் கலந்து பேசி, அவர்களது குறைகளை கேட்டறிந்து, மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பணிபுரிய அறிவுறுத்தினார்.  இந்த சிறப்பு பயிற்சி முகாமில் மாஸ்டர் மைன்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள் லஷ்மி, அபிலாஷா, சுஜாதா, அபிஷேக் ஆகியோர் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்பிற்கான 105 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: