வங்கக் கடலில் காற்றழுத்தம் நாளை உருவாகும்? வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நாளை காற்றழுத்தம் உருவாகும்  வாய்ப்பு உள்ளதாலும், தென்மேற்கு பருவக் காற்று, வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. அதனால் அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Stories: