துபாயில் நடந்த உலக கண்காட்சி 2020ல் மலபார் குழும காட்சிக்கூடம்: ஒன்றிய அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை: துபாயில் நடந்த உலக கண்காட்சி 2020ல், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் சார்பில், இந்திய நகைகளின் கைவினை திறன், கலைத்திறன், அதன் பலதரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களை, காட்சிப்படுத்தியது. ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய காட்சிக்கூடத்தை திறந்துவைத்து, பார்வையிட்டார். அப்போது, உலகெங்கும் பிராண்டின் மீதுள்ள நம்பிக்கை, பாரம்பரிய கலைத்திறன், இந்திய கைவினை நகைகளை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதை பாராட்டினார்.

ஒன்றிய அமைச்சரிடம்   மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தலைவர் எம்பி அகமது, ‘மேக் இன் இந்தியா, மார்க்கெட் டூ த வேர்ல்டு’ முயற்சியை பாராட்டினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்திய நகைகளை, உலகளவில் பிரபலப்படுத்துவதன் மூலம், நகை உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், ஏற்றுமதியை அதிகரிப்பதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இந்த கண்காட்சி கலாச்சாரம்   மற்றும் படைப்பாற்றலுக்கான உலகின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. உலகின் சிறந்த கலை, கலாச்சாரம், வர்த்தகம், தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்’’, என்றார்.

Related Stories: