திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 10 ஏரிகள் நிரம்பின

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்யும் தொடர்மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதுகுறித்து. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-  

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக தற்போது சிம்மணபுதூர் ஏரி, பொம்மிக்குப்பம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, பெருமாம்பட்டு ஏரி, ஜடையனூர் ஏரி, உதயேந்திரம் ஏரி, விண்ணமங்கலம் ஏரி, பசலிக்குட்டை ஏரி, துளசிபாய் ஏரி என மொத்தம் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

அதேபோல 3 ஏரிகளில் 90 சதவீதமும், 2 ஏரிகளில் 75 சதவீதமும், 6 ஏரிகளில் 50 சதவீதமும் தண்ணீர் நிரம்பியுள்ளன. மற்ற ஏரிகளில் 25 சதவீதம் தண்ணீர் உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மற்ற ஏரிகளும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: