அதிகாரிகள், பெண்கள் குறித்து அவதூறு பேச்சு எச்.ராஜாவிற்கு பிடிவாரன்ட்

திருவில்லிபுத்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 2018, செப்.17ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் புகாரளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் 294 பி, 353, 505/1பி ஆகிய பிரிவுகளின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவில்லிபுத்தூரில் உள்ள நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சம்மனை பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணைக்காக எச்.ராஜா ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து திருவில்லிபுத்தூர் நடுவர் எண் 2 அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: