முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவரை பதிவாளர் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் செல்லும்!: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவரை இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், ஒரு சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்களிடம் விசாரணை நடத்தவோ, பணிநீக்கம் செய்யவோ ஏற்கனவே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஊதியம் தரும் ஊழியர்களாக கருதி இடைநீக்கம் செய்யும் வகையில் கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அச்சமயம் முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவரை இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என நீதிபதிகள் தீர்பளித்து இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: