தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; அக்.10-ல் புதிய தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் அக்.8-ல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அக்.8-ல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அக்.9-ல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அக்.10-ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். அக்.10-ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: