காங். எம்எல்ஏ கார் மோதி வாலிபர் படுகாயம்

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏவின் கார் மோதி தனியார் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசந்திரசேகர் (49), பொன்னேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர். இவர், நேற்று முன்தினம் அண்ணாநகர் மாகாளி கோயில் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஜய் (24) என்பவர் வந்தார். அவர்மீது, கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அலறினார். இதை பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவரைமீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: