மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் 15 லட்சம் பேர் பயன்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிகளிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் இதுவரை மொத்தம் 15.41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: