இளையான்குடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இடம் தேர்வு-டிஆர்ஓ ஆய்வு

இளையான்குடி : தினகரன் செய்தி எதிரொலியால் இளையான்குடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமையவுள்ள இடத்தை டிஆர்ஓ ஆய்வு செய்தார்.இளையான்குடி வட்டாரத்தில் விவசாயம் முதன்மையான தொழில். நெல், மிளகாய், பருத்தி, எள், கேழ்வரகு, குதிரைவாலி ஆகிய தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சாகுபடி செய்யப்பட்ட தானியங்களை இருப்பு வைக்க போதிய குடோன் வசதியோ, ஒழுங்குமுறை விற்பனை கூடமோ இல்லை.

அதனால் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுவதாகவும், இளையான்குடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடந்த அக்.1ம் தேதி தினகரன் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதுகுறித்து விசாரணை செய்த மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, இளையான்குடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் இளையான்குடியில் டிஆர்ஓ மணிவண்ணன், தாசில்தார் ஆனந்த் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் புதிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் புதிய வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்தார்.

Related Stories: