செங்கல்பட்டு நகர காவல்நிலையத்துக்கு சைக்கிளில் வந்து டிஜிபி ஆய்வு

செங்கல்பட்டு: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வாரத்தில் இறுதி நாட்களில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன்படி, இன்று காலை அவர் சைக்கிளில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டார். இதையடுத்து கடந்த தேர்தலின்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை வழங்கினர்.

அப்போது டிஜிபி, ‘’காவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதன்பிறகு காவலர்கள் குடியிருப்புக்கு சென்று காவலர்களின் குழந்தைகளுடன் பேசினார். அங்கிருந்த அனைத்து மாணவர்களுக்கும் டிஜிபி எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதையடுத்து அங்கிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றார்.

Related Stories: