நகைக்கடன் முறைகேடு விவகாரம் தினமும் ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்: கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 100 சதவீதம் நகைக்கடன் ஆய்வுக்கு குழு அமைத்து ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதற்கான ஆய்வுப் படிவங்கள் 28.9.2021 அன்று வாட்ஸ் அப் மூலம் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குனர், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய மொத்த நகைகளின் விவரம், ஆய்வு செய்ய தேவையான குழுக்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 250 முதல் 300 பாக்கெட்டுகள் என்ற வீதம் மொத்த நகைகளை ஆய்வு செய்ய தேவைப்படும் நாட்கள் மற்றும் தோராயமாக 100 சதவீதம் நகைக்கடன் ஆய்வு முடிவுறும் நாள் போன்ற விவரங்களை கூகுள் சீட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படிவங்களை ஆய்வுக்குழுவிற்கு தொடர்புறுத்தி நடவடிக்கை மேற்கொண்டும், 100 சதவீத ஆய்வினை முடிக்க ஆகும் நாட்களைக் கணக்கிட்டு முடிவுறும் தேதி தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து உடன் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 100 சதவீத ஆய்வு தொடர்பான தினசரி முன்னேற்ற அறிக்கையினை பதிவாளர் அலுவலகத்திற்கு தினந்தோறும் மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: