பாலிவுட் நடிகைக்கு கோல்டன் விசா

சென்னை: இந்திய திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இதன்மூலம் அங்கு 10 வருடங்கள் நிரந்தரமாக குடியிருக்கலாம். பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், சஞ்சய் தத், மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ், டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் ஆகியோர் இந்த விசா பெற்றுள்ளனர். தற்போது நடிகைகளில் முதல்முறையாக ஊர்வசி ரவுட்டேலாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான இவர், தமிழில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிக்கும் படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். கோல்டன் விசா கிடைத்திருப்பது தனக்கும், தனது குடும்பத்துக்கும் மிகப்பெரிய மரியாதை என்று ஊர்வசி ரவுட்டேலா தெரிவித்துள்ளார்.

Related Stories: