விடுதலை செய்யக்கோரி அனுப்பிய பேரறிவாளன் கருணை மனுவின் நிலை என்ன? மாநில தகவல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என்னை விடுதலை செய்யக்கோரி  2019ம் ஆண்டு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினேன். அந்த மனுவின் நிலை என்ன என்றும், விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவையின் பரிந்துரையின் மீது முடிவெடுக்க ஆளுனருக்கு என்ன தடை உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தன் கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வழக்கு தொடர்பான விவரங்களை தர வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். எந்த பதிலும் வரவில்லை. எனவே, எனது மனுவுக்கு பதிலளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்துக்கு  உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த மனுவுக்கு மாநில தகவல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு,  விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: