ஊரக வேலை உறுதி திட்டம்: மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பொன்னேரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெருந்திரள் மரக்கன்று நடுதல், மரம் நடுதல், பனை விதை விதைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெருந்திரள் மரக்கன்று நடுதல், அடர்வனம் மரம் நடுதல், பனை விதை விதைத்தல் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி ஊராட்சி தலைவர் ப்ரியாராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஜமுனா ரஜினி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை துவக்கிவைத்தனர்‌. இதில் 600 மரக்கன்றுகளை 600 பேர் ஒரே நேரத்தில் நட்டனர். இதில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி செயற்பொறியாளர் ஜாஸ்மின், பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின், கூடுவாஞ்சேரி ஊராட்சி  துணைத் தலைவர் கார்த்திக், ஊராட்சி செயலாளர் ஜெகன், திமுக ஒன்றிய செயலாளர் சுகுமாரன், ஊராட்சி  தலைவர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், நந்தியம்பாக்கம் கலாவதி, அரசு அதிகாரிகள். தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: