'ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லை என வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது'!: தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை..!!

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாத வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கும் அக்டோபர் 6, 9ல் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 22ம் தேதியுடன் இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, வாக்காளரை எளிதாக அடையாளம் காண அளிக்கப்படும் பூத் சிலிப் இல்லை என வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது எனவும் பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் எனவும் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: