கோவா முன்னாள் முதல்வர் எம்எல்ஏ பதவி ராஜினாமா

பனாஜி: முன்னாள் கோவா முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான லுய்ஜின்ஹோ பெலிரியோ காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். கோவா மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சில எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகினார்கள். 2019 ஜூலையில் 10 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகினார்கள். அதன் பின் இவர்கள் ஆளும் பாஜவில் இணைந்தனர். இந்நிலையில் கோவா முன்னாள் முதல்வரும் நவ்லீம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான லுய்ஜின்ஹோ பெலிரியோ தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகரிடம் வழங்கினார்.  தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக பெலிரியோ, ‘பிரதமர் மோடியை எதிர்கொள்வதற்கு மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போன்ற ஒரு தலைவர் தேவை’ என்றார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவதி கோமன்டக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான லாவு மம்லதார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: