மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

சென்னை: மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுலா தினம் உலக நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 27ஆம் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பு 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, சுற்றுலாவும் அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும் என்கிற கருப்பொருளை வலியுறுத்தியுள்ளது. இதன் நோக்கமானது சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பினை உலக நாடுகளிடத்தே நிலைநிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும். இதனை முன்னிட்டு இன்று (26.09.2021) தமிழ்நாட்டில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராம்பரிய கட்டிடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற பாராம்பரிய நடைபயணத்தை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் துவக்கி வைத்து இறுதிவரை பங்கேற்றார்.

இந்த நடைபயணமானது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாட்டர் கேட் தொடங்கி சட்டமன்ற தலைமைச் செயலகம், கிங்ஸ் பேரக், க்ளைவ் மாளிகை, கார்ன்வாலிஸ் க்யூபோலா, கோட்டை அருங்காட்சியம், வடக்கு தெரு, பரேடு ஸ்கொயர், புனித மேரி ஆலயம், வாலாஜா கேட், தூய தாமஸ் கேட், தூய தாமஸ் தெரு, புனித ஜார்ஜ் கேட் வரை  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இ.ஆ.ப அவர்கள், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் திரு.இரா.கிர்லோஷ் குமார்,

இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் திரு.க.நந்தகுமார், இ.ஆ.ப., அவர்கள், இஸ்டோரியன் திரு.வி. ஸ்ரீராம் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கல்லுலீரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>