என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர் : கமல்ஹாசன் உருக்கம்!!

சென்னை : மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்ம பூஷன்,பத்மஸ்ரீ, மாநில அரசு விருதுகள் என பல்வேறு விருதுகளை பெற்றவர், காலத்தால் அழியாத “தங்கத்தாரகையே வருக வருக” என்ற பாடலைப் பாடியவர், தன் இனிய குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவுநாளில் அவரது இசை சாதனைகளை போற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் தனது இன்னிசை குரலால் ஒட்டுமொத்த உலகத்தையும் கட்டிப்போட்ட பாடும் நிலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது பெருமைகளை நினைவு கூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், “ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>