மஞ்சூர் அருகே கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒரநள்ளி கிராம சமுதாய கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஐவன் மோசஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மருத்துவர்கள் புரனேஷ், நிவேதா, பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர் பரத் வரவேற்றார். இதில், தங்காடு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 50 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், மனநலம், உடல் நலன் பேணுதல், சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் உள்பட பல்வேறு அறிவுரை மருத்துவர்களால் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பகுதி சுகாதார செவிலியர்கள் கிருஷ்ணகுமாரி, வைஜயந்திமாலா மற்றும் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதில் தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் துணி அடங்கிய தாம்பூல தட்டுகளுடன், புளிசாதம், தயிர்சாதம், தக்காளிசாதம், எலுமிச்சை சாதம், பிரியாணி, வடை, பாயாசம் என அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.

Related Stories: