சென்னை: அஜித் நடித்துள்ள வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். அவர் இந்தியில் பல படங்களை தயாரித்தார். தமிழில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க போனி கபூருக்கு அஜித் கால்ஷீட் தந்தார். அதன்படி வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்தார். இந்த படத்தையடுத்து, மீண்டும் இயக்குனர் வினோத், போனிகபூர் கூட்டணியில் வலிமை படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்கினார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.