மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளி கதிர்கள் தரிசிக்கும் அரிய நிகழ்வு

மதுரை: மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சிவபெருமானை சூரிய ஒளி கதிர்கள் தரிசிக்கும் அரிய நிகழ்வு நடந்தது. மதுரையில்  தெப்பக்குளம் பகுதியில் உள்ளது முத்தீஸ்வரர் கோயில். இக்கோயிலில் சூரிய கதிர்கள் சிவனை தரிசிக்கும் அதிசயம் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் துர்வாச முனிவர் சாபத்தில் இந்திரனின் ஐராவத யானை மதுரையின் இக்கோயிலில் சாபம் தீர்ந்ததும், இங்கேயே தங்கியது. இந்திரன் உத்தரவின் பேரில் யானையை கதிரவன் தேடி வந்து அழைத்து சென்றதாக ஐதீகம்.

ஒரு வருடத்தில் மார்ச், செப்டம்பர் மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய கதிர்கள் இக்கோயிலின் நந்தியில் பட்டு எதிரொலித்து மூலஸ்தானத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவனை தரிசிக்கும் அதிசயம் நடக்கும். இந்த வகையில் இந்தாண்டு, செப்டம்பர் 19ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை காலை 6.15, 6.25 மணி மற்றும் 6.40 மணி  முதல் 6.50 மணி வரை இந்த தரிசன அதிசயம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: