கேரட் பிரியாணி

செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் கலந்து வதக்கவும். பின் தக்காளி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர்,  உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின் தயிர் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி, புதினா சேர்த்து கொதி வந்தவுடன் பாஸ்மதி அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். பின் சுவையான கேரட் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு