நான்கு வழிச்சாலை பணிக்காக கண்டமங்கலம் பள்ளி கட்டிடம் இடிப்பு

திருபுவனை: விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலை பணிக்காக கண்டமங்கலம் அரசு பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் மதகடிப்பட்டு முதல் எம்.என்.குப்பம் வரை உள்ள சாலையோர நிலங்கள், மனைகள்,  கையகப்படுத்தப்பட்டு, அதில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள், அரசு கட்டிடங்களை இடித்து அகற்றி நிலங்களை சமன் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

தற்போது, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வந்து படித்து செல்கின்றனர். மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்க கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் வகுப்பறையில் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வுக்கூடத்தை விரைந்து கட்ட வேண்டும் என பொற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: