கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம் விழா..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன.

இன்று காலை சம்மந்த கணேசர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது. வழக்கமாக இந்த விழாவின் போது பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்வர். தற்போது மத சடங்குகளில் கூட்டமாக பங்கேற்க தடை இருப்பதால் முதல்முறையாக பந்தக்கால் விழா பக்தர்களின்றி ந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது.

Related Stories: