சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளைக்கு 12 கூடுதல் குற்றவியல் வக்கீல்கள் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 6 கூடுதல் குற்றவியல் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக தலைமை குற்றவியல் வக்கீலாக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் குற்றவியல் வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 6 கூடுதல் குற்றவியல் வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 6 கூடுதல் குற்றவியல் வக்கீல்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, கூடுதல் குற்றவியல் வக்கீல்களாக பாபு முத்து மீரான், ஜி.வி.கஸ்தூரி ரவிச்சந்திரன், ஆர்.முனியப்பராஜ், ஏ.கோகுலகிருஷ்ணன், ஏ.தாமோதரன், இ.ராஜ் திலக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு எஸ்.ரவி, இ.அந்தோனி சகாய பிரபாகர், ஆர்.எம்.எஸ்.சேதுராமன், ஆர்.மீனாட்சி சுந்தரம், ஏ.திருவடி குமார், டி.செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: