2 ஆயிரம் குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், இந்தோ ஜெர்மன் ஆகியவை இணைந்து கொரோனாவால் பாதித்த குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு ரூ.1500 மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சீ.காந்திமதிநாதன் தலைமை வகித்தார். ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்.  

ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் கலந்துகொண்டு கொரோனாவால் பாதித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனவால் பாதித்த ஏழை, எளிய 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வாகனம் மூலம் நேரில் கொண்டு சென்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஈக்காடு ஊராட்சி தலைவர் லாசனா சத்யா, ஐ.ஆர்.சி.டி.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் விஐயன், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.   

Related Stories: