திருவாரூர், பவித்ரமாணிக்கம் பகுதியில் 10 ஆயிரம் தென்னை மரங்கள் வளர்ப்பு-கொப்பரை தேங்காய்க்கு வெளிமார்க்கெட்டில் வரவேற்பு

திருவாரூர் : திருவாரூர் அடுத்த பவித்ரமாணிக்கம், சிமிலி, பெரும்பண்ணையூர், புதுக்குடி மற்றும் அரசவனங்காடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சுமார் 10 ஆயிரத் திற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் வளர்க்கப் பட்டு வருகின்றன.இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள் தரமாக இருப்பதால் குஜராத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனு ப்பி வைக்கப் படுகிறது. இது தவிர உலர வைக்கப் பட்ட கொப்பரை தேங்கா யானது எண்ணெய் தயாரிக்க காங்கேயத்தில் உள்ள எண்ணெய் ஆலைக்கு கொண்டு செல்லப் படுகிறது. இங்கிருந்து செல்லும் கொப்பரை தேங்காய்க்கு வெளி மார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது தென்னை விவ சாயிகளை மகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

இதுகுறித்து பவுத்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த தென்னை விவசாயி நாகராஜன் கூறியது: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை களில் ஒருபகுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விற்பனை பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அரசு அறிவித்த சில தளர்வுகளால் தற்போது வெளிமார்க்கெட்டுகளில் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது.

இது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் தோப்பு பராமரிப்பு செலவு மற்றும் உரம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. மேலும், பருவமழை காரணமாக மரத்தில் இருந்து பூக்கள் விழுவது அதிகரி த்து வருவதால் நடப்பாண்டு விளைச்சல் சற்று குறைந்து உள்ளது.இதனால், தற்போதைய கொள்முதல் விலை உயர்வு எங்களை போன்ற சிறு குறு தென்னை விவசாயிகளுக்கு எந்த லாபத்தையும் தராது. எனவே, கொள் முதல் விலையாக ஒரு கிலோ கொப்பரைக்கு ரூ.120ம்,தேங்காய்க்கு ரூ.32ம் கிடைத்தால் மட்டுமே எங்களுக்கு ஓரளவு கட்டுப்படியாகும் என்றார்.

Related Stories: