எதிர்பார்த்ததை விட அதிக அளவு பலன்!: தமிழ்நாட்டில் வாரந்தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும்..அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

தென்காசி: தமிழ்நாட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், தென்காசி மாவட்டம் கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய மா.சுப்பிரமணியன், தடுப்பூசி சிறப்பு முகாம்களால் எதிர்பார்த்ததை விட அதிக அளவு பலனை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒருசில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நாளையும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இனி வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தவும், அதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை ஒன்றிய அரசிடம் இருந்து பெறவும் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எல்லையோர 9 மாவட்டங்களில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: