காஸ், பெட்ரோல் விலை படிப்படியாக குறையும்: நிர்மலா சீதாராமன் தகவல்

மதுரை: காஸ், பெட்ரோல் விலை படிப்படியாக குறைக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சவுடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:இந்தியாவில் 112 மாவட்டங்கள் முன்னேற துடிக்கும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் ஆய்வு செய்ய வந்துள்ளோம். இறக்குமதி செய்வதால் காஸ், பெட்ரோல் விலை உயர்வு இருக்கிறது. காஸ், பெட்ரோல் விலை படிப்படியாக குறைக்கப்படும். சிவகாசி பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் இல்லை. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை சந்தித்து குறைகள் சொல்லலாம் என்றார்.

Related Stories: