முன்மாதிரி திட்டமாக தெலங்கானாவில் டிரோன்கள் மூலம் மருந்து வினியோகம்

விகாராபாத்: வான்வழி மருந்துகள் திட்டத்தை உலக பொருளாதார மன்றம், நிதி ஆயோக் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் ஹெல்த்நெட் குளோபல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன்  தெலங்கானா மாநில அரசு தொடங்கி உள்ளது. இதனை ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் அமல்படுத்திய டிரோன் விதிகள், அவற்றின் பயன்பாட்டினை மிகவும் எளிமையாக்கி உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், விகாராபாத்தில் உள்ள 16 பசுமை மண்டலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் டிரோன் மூலம் மருந்துகள், கொரோனா தடுப்பூசிகள் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் இணைந்து இதனை நாட்டின் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்த இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: