போயஸ் கார்டன் வீட்டு விநாயகரை கும்பிட்டார் சசிகலா

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை முதலே விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களின் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று போயஸ் கார்டனில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் வெளியே அமைந்துள்ள விநாயகர் சிலை முன்பு எளிய முறையில் வழிபாடு நடத்தினார். சசிகலாவுடன் அவரது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர். சிறையில் இருந்து திரும்பிய சசிகலா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது இல்லத்தை பார்வையிட வந்தார். அதன்பிறகு நேற்று அவர் போயஸ் கார்டன் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: