தமிழில் குடமுழுக்கு நடத்த குழு

மதுரை: தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன்(ஓய்வு), பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நீதிபதிகள், விரிவான உத்தரவுக்காக தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.  பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உலகிலேயே தமிழ் தான் பழமையான மொழி என்பதற்கு அறிவியல்பூர்வமாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளன. தெய்வங்கள் உள்ளூர் மொழிகளை புரிந்து கொள்ளாது என்று கூறமுடியாது.

நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்கள் பலரால் இயற்றப்பட்ட பழமையான துதிப்பாடல்களை கண்டறிந்து குடமுழுக்கின்போது பாடிடும் வகையில் தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: