சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு நட்சத்திர ஆமைகள் கடத்திய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் சரக்கு விமானத்தில் இருந்த 15 பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்தன. மொத்தம் 2,247 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதன் மதிப்பு ₹25 லட்சம். இதையடுத்து கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகள், வேளச்சேரி வன உயிரின பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், வேலூர் மாவட்டம் குடியாத்ததைச் சேர்ந்த வினோத்(25) என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

மேலும் சென்னை விமான நிலையத்தில் முதல்முறையாக 2000க்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பிடிபட்டது. இந்த வழக்கை, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு மாற்ற சுங்கத்துறை மற்றும் மத்திய வனகுற்றப் புலனாய்வு துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் முறைப்படி இந்த வழக்கு விசாரணையை சிபிஐயின் வசம் ஒப்படைத்தனர்.இந்த வழக்கு சிபிசிஐடி ஒப்படைக்கப்பட்டது  இந்தியாவிலேயே இதுவே முதல்முறை  என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: