சென்னை: இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரம், இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது.