ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சரக்கு கொண்டு சென்றால் வரியில் 100% அபராதம்: அமைச்சர் மூர்த்தி மசோதா தாக்கல்

சென்னை: சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட முன்வடிவு:  2017ம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தில் பொருந்தத்தக்க திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. எனவே இதில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி சரக்குகள் எதையும் இடம் பெயர்வு செய்யும் நபர் அல்லது சரக்குகளின் உரிமையாளரானவர் 15 நாட்களுக்குள் தண்டத்தொகையை செலுத்த தவறுகையில், அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட அல்லது வாகனங்கள் உட்பிரிவின் கீழ் செலுத்தப்பட வேணடிய தண்டத் தொகை மீட்டெடுப்பதற்காக வகுத்துரைக்கப்படலாம்.

அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள் விற்கப்படுதல் மற்றும் பிற வகையில் தீர்வுக்கு உள்ளாகுதல் வேண்டும். 3ம் உட்பிரிவின் கீழ் சரக்குகள் மீது செலுத்த வேண்டிய வரியில் நூறு சதவீதம் இணையான தண்ட தொகை செலுத்த வேண்டும் அல்லது ரூ.1 லட்சம் இதில் எது குறைவோ, இடம் பெயர்வு செய்பவரால் செலுத்தப்பட்டவுடன் வாகனத்தை விடுவித்தல் வேண்டும். ஆனால், நிறுத்தி வைக்கப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்ட சரக்குகள் அழுகக்கூடியதாகவோ அல்லது ஆபத்து விளைவிக்க கூடியதாகவோ அல்லது காலம் செல்ல மதிப்பில் தேய்மானம் அடையக்கூடியதாகவோ இருந்தால் 15 நாள் கால அளவை உரிய அலுவலர் குறைத்திடலாம். 

Related Stories: