ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் வருண் குமார் ஐபிஎஸ்.க்கு எதிராக பெண் புதிய மனு

புதுடெல்லி: சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரியதர்ஷனிக்கும், வருண்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர், யுபிஎஸ்சி தேர்வு முடிவில் வருண் குமார் ஐ.பி.எஸ் பதவிக்குத் தேர்வானார். இரண்டு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், வருண் குமார் கூடுதல் வரதட்சணை கேட்டதால் அவர்கள் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருண் குமார் மீது பிரியதர்ஷனி புகார் செய்தார்.

இதையடுத்து, வருண்குமார் ஐபிஎஸ் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ள அவர், கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிரியதர்ஷனி நேற்று புதிதாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘திட்டமிட்டு காதிலித்து ஏமாற்றிய வழக்கில் போலீஸ் அதிகாரியான வருண் குமார் ஐ.பி.எஸ்.சை ஜாமீனில் விடுவித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என கூறியுள்ளார். நேற்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமுன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி வருண் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: