ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள்- முதல்வர் விளக்கம்

சென்னை: ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு பாஜகவின் நயினார் நாகேந்திரன் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Related Stories: