மாமல்லபுரத்தில் மஞ்சூரியா குங்பூ தற்காப்பு கலை உள் அரங்க பயிற்சி கூடம்: உயர்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மஞ்சூரியா குங்பூ தற்காப்பு கலை உள் அரங்க பயிற்சி கூடத்தை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் திறந்து வைத்தார். மாமல்லபுரத்தில் மஞ்சூரியா குங்பூ உள் அரங்க பயிற்சிக் கூடம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மஞ்சூரியா குங்பூ தலைவரும், மதிமுக மாநில துணை பொது செயலாளருமான மல்லை சி.இ.சத்யா தலைமை தாங்கினார். மாஸ்டர்கள் பாஸ்கர், அசோக்குமார், ரவி ஆறுமுகம், தங்கேசன், ஜோதி, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி உள் அரங்க பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது, நீதிபதி மகாதேவன் பேசுகையில், ‘உலக தற்காப்பு கலையின் தாயகமாக சென்னையை அடுத்த காஞ்சிபுரம் திகழ்ந்து வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து, சீன நாட்டுக்கு புத்த மதத்தை விளக்க சென்ற போதிதர்மர் ஐந்து தற்காப்பு கலைகளை கற்று கொடுத்தார். தொடர்ந்து, சீனா முழுவதுமே படிப்படியாக தற்காப்பு கலையை கற்று கொடுக்க ஆரம்பித்தார்,’ என பேசினார். இதில், கிங்ஸ் கல்லூரி நிறுவனர் டேவிட் கே.பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: