சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அதிமுக ஆட்சியில் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் 1044 குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

சென்னை சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது ராயபுரம் ஐட்ரீம் இரா.மூர்த்தி (திமுக) பேசுகையில், “ராயபுரம் பகுதியில் ராம்தாஸ் நகர் என்ற இடத்தில் சுடுகாட்டில் வந்து குடிசைமாற்று வாரியம் சார்பில் வீடு கட்டப்பட்டது. சிஎம்டிஏ அதிகாரிகளை போய் பார்த்து, சிஎம்டிஏ அனுமதி கொடுக்காமல் 13 மாடி கட்டிடத்தை எப்படி கட்டினீங்க என்று கேட்டோம். இதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதியே இன்னும் கொடுக்கவில்லை அப்படி என்று சொன்னார்கள் என்றார்.  

இதற்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ராயபுரம் தொகுதியில் உள்ள மூலக்கொத்தளம் திட்ட பகுதி ஒன்றில், மாநகராட்சி இடத்தில் புதிய கட்டுமானமாக 648 வீடுகள் குடியிருப்புகள் ரூ.84.24 கோடி மதிப்பில் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமலேயே இந்த இரு திட்ட பகுதிகளிலும் கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். மூலக்கொத்தளம் திட்டப்பகுதி 1ல், 28.11.20019 அன்றும், திட்டம் 2ல் கட்டுமான பணிகள் 2.11.2020ம் ஆண்டு முடிவு பெற்றது.

இந்நிலையில் 5.1.2021 அன்று, இரு திட்டப்பகுதிகளிலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நோட்ட்டீஸ் வழங்கியிருக்கிறது. அதிமுக ஆட்சியில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டியதன் காரணமாக இந்த இரு திட்டப்பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் இணைப்பு, குடிநீர் இணைப்பு இதுவரை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவின் வாரியத்தின் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டு குழு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க பரிந்துரை செய்து, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள்ளாக, இந்த ஆணையத்தின் அனுமதியை பெற்று, இக்குடியிருப்புகளுக்கு மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற வசதிகள் முதல்வர் அனுமதியை பெற்று வழங்கப்படும். குடியேற உள்ள ஏழைகளுக்கு எல்லாம் வீடுகள் வழங்கப்படும்.

Related Stories: