இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி: ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு..!!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைவந்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்தனர்.  பின்பு ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.   99 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

மேலும், ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். ரோகித் சர்மா 127 ரன்களும், கேஎல் ராகுல் 46 ரன்களும், புஜாரா 61, கோலி 44, பன்ட் 50, தாகூர் 60 ரன்கள் அடிக்க இந்திய அணி 466 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி ஐந்தாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடங்கியது.

மேலும், இந்திய பந்துவீச்சாளர்களின் சாதுர்யமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி வீரர்கள் தனது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். இதில், பும்ரா தனது அபாரமான பந்துகளை மீண்டும் ஆட்டத்தை தன்வசம் படுத்தினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை எடுத்தார்.  இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் 4 வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்ஸில் சத்தம் அடித்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories: