தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடுகிறது: துறை ரீதியிலான விவாதம் நடக்கிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை, ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்று செய்தித்துறை, கைத்தறி, துணிநூல் துறை, வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்து பேசுவார்கள். தொடர்ந்து நாளை நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள், சட்டத்துறை, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையும், 8ம் தேதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 9ம் தேதி போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, 11ம் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது.

காவல் துறை மானியக்கோரிக்கையின் போது துறையை கவனிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார். தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார். முதல்வர் துறை என்பதால் காவல்துறையினருக்கு என்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. 13ம் தேதி திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை விவாதமும் நடக்கிறது. 13ம் தேதியோடு சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெறுகிறது.

Related Stories: