பழநி அருகே ஓராண்டாக முடங்கிக் கிடக்கும் பாலப்பணி: துரிதப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

பழநி: பழநி அருகே டிகேஎன் புதூர் கிராமத்தில் ஓராண்டிற்கு மேலாக பாலப்பணிகள் முடங்கிக் கிடக்கிறது. அதை துரிதப்படுத்தி பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பழநி அருகே ஆயக்குடியில் இருந்து ரூக்குவார்பட்டி செல்லும் சாலையில் டிகேஎன்புதூர் பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டது. ஆமை வேகத்தில் இப்பணி நடந்தது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் இப்பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகி வந்தனர். கடந்த ஓராண்டிற்கு முன்பு டூவீலரில் சென்ற நபர் சீரமைப்புப்பணி நடப்பது தெரியாமல் பாலத்தில் மோதி உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக இப்பணி நடைபெறாமல் முடங்கிக் கிடக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் பாலம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இரவு நேரங்களில் இச்சாலையை பயன்படுத்துவதில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் முடங்கிக் கிடக்கும் இப்பணிக்கு உயிர்கொடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: