ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி அங்கன்வாடி பணியாளர்கள் கும்மிடியடித்து விழிப்புணர்வு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக ‘வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு’ என்ற தலைப்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை பகுதியில் 20 மையங்களை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடினர்.

இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராசாத்தி தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலையம் எதிரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கோலம் போட்டும், கும்மியடித்தும், பாடல்கள் பாடி விழிப்புணர்வை உறுதி மொழி எடுத்தினர். பின்னர், சத்துமாவில் கொழுக்கட்டை, கஞ்சி, பாசி பயிரில் பாயசம், சுண்டல் ஆகியவைகளை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இறுதியில், பேபி நன்றி கூறினார்.

Related Stories: