சென்னை: விளையாட்டு மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: சென்னை புறநகரான தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் புதிதாக மாநகராட்சியாக இணைக்கப்பட்ட பகுதியில் பெரிய விளையாட்டு மைதானமோ, நீச்சல் குளமோ இல்லை. எனவே நேரு விளையாட்டு மைதானம் போன்று பெரிய அளவில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு மைதானம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைத்து தர வேண்டும்.