எல்ஐசி தென் மண்டலத்தில் 65வது காப்பீட்டு வார விழா

சென்னை: எல்ஐசி தென்மண்டலத்தின் 65வது காப்பீட்டு வார விழா செப்.1 முதல் 7ம் தேதி வரை நடக்கிறது. இதனை தொடங்கி வைத்த தென்மண்டல மேலாளர் கதிரேசன், வணிக சாதனைகள், வாடிக்கையாளர்களுக்காக எடுக்கப்பட்ட புதிய முயற்சிகள் பற்றி கூறினார். மேலும், எல்ஐசி தென்மண்டலம் கடந்த மார்ச் 31 வரை ஒற்றை பிரீமிய இலக்கை அடைந்ததால், மண்டலங்களுக்கு இடையே முதலிடத்தில் உள்ளது. முதல் பிரீமிய வருமான இலக்கை அடைந்து 2ம் இடத்தில் உள்ளது. 17.11 லட்சம் பாலிசிகள் மற்றும் முதல் பிரீமிய வருமானமாக ₹6357.11 கோடியை பெற்றுள்ளது. எல்ஐசியின் முகவர்கள் மற்றும் புது வணிகம் சார்ந்தோர் ‘ஆனந்தா’ மொபைல் செயலியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகின்றனர், என்றார்.

வணிக ஆண்டு 2020-21ல் உரிமங்களை அளித்ததில் தென்மண்டலம் முன்னோடியாக திகழ்கிறது. 24.54 லட்சம் பாலிசிகள் மூலம் ₹15,812 கோடிகள் முதிர்வுரிமங்கள் அளித்து, தென் மண்டலம் முதலாவதாக திகழ்கிறது. எல்ஐசியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ‘Relationship Extension Programme’ (REP) என்ற புது முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால், 2020-21 ஆண்டில் 53,954 பாலிசிதாரர்களை தொடர்பு கொண்டு ₹308.57 கோடிகளை பிரீமியமாக ஈட்டியுள்ளது. 2.7 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

Related Stories: