தீ விபத்தால் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நுழைவாயில் ஓராண்டுக்குள் சீரமைக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை:2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நுழைவாயில் ஓராண்டுக்குள் சீரமைக்கப்படும் என பேரவையில் ந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 02.02.2018 அன்று தீ விபத்து காரணமாக வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் பல ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பிய திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் , ”உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதனை சீரமைக்க குழு அமைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நுழைவாயிலை சீரமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது” என்றார்.

இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில்,” தீ விபத்து ஏற்பட்ட 2018ம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முதல் கூட்டம் நடத்தியிருக்கும் நிலையில் அதற்கு பிறகு மூன்று ஆண்டுகளாக அந்த குழு ஆலோசனை மேற்கொள்ளவில்லை. எனினும் தீ விபத்து ஏற்பட்ட வீரராகவர் வாயிலை முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாவட்ட அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜனுடன் ஆய்வு செய்யப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டுக்குள் இந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும்” என்றார்.

Related Stories: