10 அம்ச கோரிக்கைகளுடம் டெல்லிக்கு புறப்பட்டார் மா.சுப்பிரமணியன்: பிற்பகல் 2 மணிக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க திட்டம்..!

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டனர். டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். தமிழக மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியறுத்த உள்ளேன்.

11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்பட வேண்டும்.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். நீட் தேர்வு சம்பந்தமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கொடுக்க இருக்கிறோம். மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி கோர உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: