சென்னை மாநகராட்சியில் 50.66 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வரை 35,63,992 பேருக்கு முதல் தவணையும், 15,02,122 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் 27,62,013 பேர், பெண்கள் 23,03,309 பேர், 60 வயதுக்கு மேல் உள்ள 10,26,650 பேர், 45-60 வயதுக்குள் 14,43,416 பேர், 18-44 வயதுக்குள் 25,96,048 பேர் என மொத்தம் 50,66,114 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: