தலைதூக்கும் ரூட் தல பிரச்னை கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதல்: கொரட்டூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னையில் மாநில கல்லூரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையில் ஈகோ பிரச்னை பல வருடங்களாக இருந்து வருகிறது. இவர்கள் கல்லூரிக்கு சென்று வரும்போது ஓடும் ரயில் மற்றும் பஸ்சில் அடிக்கடி ஆயுதங்களுடன் மோதி வந்தனர். இதில் பல மாணவர்கள் வெட்டுக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் இரண்டு கல்லூரி மாணவர்களையும் தகராறு நடக்கும்போதெல்லாம் கைது செய்துவது வழக்கம். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று காலை மேற்கண்ட இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் கல்லூரிக்கு வருகை தந்தனர். பின்னர் கல்லூரி படிப்பை முடிந்து மதியம் வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்தனர்.

வியாசர்பாடி, ரயில் நிலையம் அருகில் வந்தபோது ரயிலுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் ‘நீ கெத்தா நான் கெத்தா யார் கெத்தா’ என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அவர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அந்த மின்சார ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை மின்சார ரயில் நெருங்கி உள்ளது. அப்போது கல்லூரி மாணவர்கள் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். இதனையடுத்து டிரைவர், ரயிலை கொரட்டூர் ரயில் நிலையத்தில் நிறுத்தினர். தனால் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்த ரயில்வே போலீசார். தகராறில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்தனர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: